கீதையின் மிகப்
பிரபலமான வரிகள் இவை. சரி, நமக்கு நடக்கும்
எல்லாமே எப்படி நன்றாகவே நடந்தது என்று கூற முடியும்? உளவியல் ரீதியில் காரணமில்லாமல் காரியமில்லை என்பார்கள். எல்லாமே ஒன்றோடொன்று
தொடர்புடையது. உலகத்தில் தனித்து என்றச் சொல்லுக்கே இடமில்லை. ஆங்கிலத்தில் இதனை, ‘everything connected to
everything’ என்பார்கள்.
சூரியக் குடும்பத்தைப் பாருங்கள். 9 கிரகங்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு
கோடிக்கணக்கான வருடங்களாகச் சூரியனைச் சுற்றி வருகிறது. அது போலத்தான் நம்
வாழ்க்கையும்.
உலகத்தில் எந்த
இயக்கமும் நேர்கோட்டில் இயங்கவில்லை;மாறாக
எல்லாமே வட்ட வடிவில் தான் சுழல்கிறது. அதனால் தான் வினை விதைத்தவன் வினையறுப்பான்
தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்பது இயற்கையின் நியதி. நம் வாழ்க்கையில் பல
விடயங்கள் நம்மை நிம்மதி இழக்கச் செய்கிறது. குழப்பங்களும் விரக்தியும் நம்மை
விரட்டுகின்றன. பிரச்சனைகள் பெரிதாகி வாழ்க்கையையே புரட்டிப்போட்டு விடுகிறது.
இந்திலை மாற வேண்டும் என்றால் அனைத்தையும் தொடர்புப் படுத்திப் பாருங்கள். நிறைய
உண்மைகள் விளங்க ஆரம்பிக்கும். இயற்கை நமக்கு மிகப்பெரிய ஆசான்.
கடலில் ஓர் இடத்தில்
அலை எழுந்தால் அது மற்றோர் இடத்தில் பள்ளத்தை உண்டாக்குகிறது. ஒருவனுக்கு இன்பம் வந்தால், மற்றொருவனுக்கோ அல்லது பிராணிக்கோ துன்பம் வருகிறது.
அதனால் தான் மனிதனுக்கு இன்பமும் துன்பமும் மாறிமாறி வருகின்றது. இவ்வாறு மாறிமாறி
வருவதனால் தான் கட உபநிடதத்தில் ‘மனம் சோர்ந்து
விடாதீர்கள். பாதை மிகவும் கடினமானது. கத்தி முனையில் நடப்பது போன்றது. ஆனாலும், சோர்வு அடையாதீர்கள்.
எழுந்திருங்கள்.விழித்திருங்கள். குறிக்கோளை, லட்சியத்தை அடைந்தே தீருங்கள்.’ என்கிறது. எகிப்திய நாட்டின் பழம்பெரும் சிந்தனையாளர் எப்பிக்தேலஸ்(55-135பி.சி)
‘Its not what
happens to you, but how you react to it that matters’ மிகத் தெளிவாக உரைத்திருக்கின்றார். இதனையே நவீன
காலத்தில், ‘every
actions has an equal and opposite reactions’ என்று அறிவயல் மேதை ஐசக் நியுட்டன்
விளித்திருக்கிறார்.
மீண்டும் ஒரு முறை
சிந்தித்துப் பாருங்கள். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. குருக்ஷேத்திரப் போர்
முடிந்த பின்னர், திருதராஷ்டிரன் ஸ்ரீ கிருஷ்ணரைப்
பார்த்து, ‘கண்ணா, என் மகன்கள் 100 பேரையும் இப்போரில் இழந்து விட்டுத் தவிக்கிறேன். இதற்கு
காரணம் என்ன?’ கிருஷ்ணர் கூறுகிறார், ‘50 பிறவிகளுக்கு முன்னர் ஒரு முறை நீங்கள் வேடனாய்
பிறப்பெடுத்திருந்தீர். அப்போது நீங்கள் ஓர் ஆண் பறவையை வேட்டையாட முயன்றீர்கள்.
ஆனால், அது உங்கள் அம்பிடம் இருந்து
தப்பி விட்டது. அதனால், ஏற்பட்டக்
கோபத்தில் நீங்கள் கூட்டிலிருந்த அதன் குஞ்சுகளை எல்லாம் கொன்று விட்டீர்கள். அந்த
ஆண் பறவை ஒன்றும் செய்ய இயலாமல் வேதனையுடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தது.
அந்தத் பறவையை,அதன் நூறு குஞ்சுகளைக் கொன்றதன்
மூலம் துன்புறுத்திவிட்டீர்கள். இன்று நீங்கள் துன்பம் அடைவதற்கு அதுவே காரணம்.’
50 பிறவிகளுக்குப்
பிறகும் நாம் செய்த கர்மம் நம்மைத் தொடர்கிறது என்பது இதன் வழி தெளிவாகிறது. ஆக, ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’ என்ற வாசகம் உண்மையாகிறது. நமக்கு நடக்கும் ஒவ்வொரு
கர்மாவும் ஏற்கனவே முடிவுச்செய்யப்பட்டவை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் பாருங்களேன். காரணம், விதி ஒரு கதவை மூடும் பொழுது நம்பக்கை இன்னொரு
கதவைத் திறக்கிறது என்பார்கள். இயற்கையின் நியதி (cosmic law) என்று ஒன்று இருக்கிறது. ‘நீங்கள் எதை விதைக்கிறீர்களோ, அதை அறுவடை
செய்வீர்கள்’ என்பது தான் அது. இங்கு விதைத்தது
என்பது உங்களுடைய எண்ணங்களே! எண்ணமே உலகை ஆள்கின்றன. எண்ணத்தை மாற்றினால்
நிச்சயமாக வாழ்க்கை மாறும். வாழ்க்கை என்பது ஒட்டுமொத்த எண்ணங்களின் பதிவு.
நேற்றையப் பதிவு இன்றைய வாழ்வு; இன்றையப் பதிவு
நாளைய வாழ்வு.
இராமாயண இதிகாசம்
முழுவதும் நம் வாழ்வின் பிரதி பிம்பங்களே! எடுத்தாண்டு பாருங்கள், ஆயிரம் தெளிவுகள் பிறக்கும். இராமனின் தந்தை தசரத
மகாராஜாவிற்கு மூன்று மனைவிகள். முதல் மனைவி கௌசல்ய தேவிக்குப் பிறந்தவர் தான்
ராமர். இரண்டாம் மனைவி கைகேயிக்குப் பிறந்தவர்தான் பரதன். இராமாயணத்தைப் புரட்டிப்
போட்டது கைகேயியேச் சாறும். அழகும்,அறிவும் படைத்தக்
கைகேயி தசரதனின் மேலான அன்பு மனைவியாவாள். ஆனால், சகுனியின் வார்த்தையைக் கேட்டு எப்படி மதியிழந்தாள்? இராமனிடம் மிகவும் பிரியம் கொண்டவள். இராமன் கண்டிப்பாக 14 ஆண்டுகள் வனவாசம்
போக வேண்டும். பரதன் நாட்டையாள வேண்டும் என்று எப்படி துரோக எண்ணம் உருவாகியது? தசரதன் இராமனை விட்டுப் பிரியத்தான் வேண்டும் என்பது
வெறும் சதியா அல்லது விதியா? துயரம் தாளாத
தசரதன் அதனால் மாண்டுப் போனான்.
‘தீதும் நன்றும் பிறன்தர வாரா’ என்ற கணியன் பூங்குன்றனார் உரைத்த அமுத மொழி இங்கு உண்மையாகிறது. ஆம், தசரதன் தன் சிறு வயதில் தவறுதலாக ரிஷி குமாரனைக்
கொன்று, அவனுடைய வயோதிகப் பெற்றோர்களுக்கு
எத்தகைய பெரும் துன்பத்தை ஏற்படுத்தினானோ, அது மீண்டும் நடந்திருக்கிறது. அவ்வளவுதான். ‘ஒரு வகை இழப்பு மறுவகை இலாபம்’ என்று சீனத்
தத்துவ ஞானி லௌ சு அவர்கள் அழகாக மொழிந்திருக்கிறார். இராமன் வனவாசம் செல்லா
விட்டால் இராமாயணம் பிறந்திருக்காது. ஆக,
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்பது மீண்டும் உண்மையாகிறது. நடந்ததை ஏற்றுக்
கொள்ளுங்கள். பிறகு,ஆழமாக சிந்தித்துப் பாருங்கள்.
இயற்கை உங்களுக்கு வழிகாட்டும்.