இறைவன் நம்மைப் படைக்கும்
பொழுது 4 விதமான சக்திகளை நமக்கு அளித்திருக்கின்றான். உயிர், உடல், ஆன்மா மற்றும்
மனம். ஆத்மா தொடர்ந்து புதிய பிறப்புகளை எடுக்கிறது. ஒவ்வொரு பிறப்பின்
அனுபவங்களையும் ஆத்மா தன்னுடன் எடுத்துச் செல்கிறது. இந்த அனுபவங்களை தான் மனம்
என்று அழைக்கப்படுகின்றன. ஆத்மா எடுத்துச் செல்லும் அனுபவங்களை ஒட்டியே
மறுபிறப்பின் தன்மைகள் அமைகின்றன. இந்து மதம் ‘கர்மா’ என்று இந்த அனுபவங்களைக்
கூறுகிறது. கர்மாவை எது சுமந்துச் செல்கிறதோ, அதுவே மனம் என்கிறது. மனம் மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நினைவு
மனம் (conscious
mind), ஆழ்மனம்
(sub-conscious
mind), அதீத
மனம் (super-conscious
mind).
மனம் நம் உடம்பில் எங்கு
இருக்கிறது என்று மனோவியல் அறிஞர்கள் சரியாகக் கனித்திருக்கிறார்கள். அஃது, நம் மூளையில் தான் கிடத்தி வைக்கப்பட்டுள்ளது. அது
சரியாக நம் நடு நெற்றிக்கு பின்னால்,
மூளையில் நடு பகுதியிலே இருக்கிறது. ஆங்கிலத்தில் அதனை Pituitary Gland என்று சொல்வார்கள். சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணைத்
திறந்ததற்கும் மனதிற்கும் நிச்சயமாகத் தொடர்பு உண்டு. நெற்றியில் பொட்டு வைப்பதும், திருநீறு அணிவது எல்லாம் நம் முன்னோர்கள் அறிந்தே
கொடுத்த அற்புத பொக்கிஷங்கள். மனிதனின் சாதனைகளையெல்லாம் ஆழ்மனமே நிறைவேற்றி
வைக்கிறது. பாரா சைக்கலாஜி என்பது அதீத மனத்தைப் பற்றி ஆராயும் ஒரு துறை. ‘பதஞ்சலியின் யோகா சூத்திரம்’ இந்தத் துறையில் அற்புதமான முன்னோடி நூலாகும்.
‘மனம் ஒரு நல்ல வேலைக்காரன்; ஆனால், மோசமான எஜமானன்’ என்று முன்னோடிச் சாந்தனையாளர் சாக்ரடிஸ் உரைத்திருப்பது எவ்வளவுப் பெரிய
உண்மை. மனதைச் சரியாகப் பயன்படுத்தும் சூத்திரமே வாழ்வின் முக்கியமான
தாத்பரியங்கள். ‘உலகில் உள்ள எல்லாச் சக்தியிலும்
மேன்மையான சக்தியாக ஒன்று இருக்கிறது. அதுவே மனிதனுடைய மனோசக்தி’ என்று ரஸ்யாவின் புரட்சியாளர் ஸ்டாலின்
கூறியிருக்கிறார். அந்த மேன்மையான மனோசக்தியே இறைவன் மனிதர்களுக்குப் படைத்த மிகப்
பெரிய வரப்பிரசாதமாகும். ஆனால், இதை உணராமலேயே
வாழ்ந்து கொண்டிருப்பது வேதனையான விடயம். ‘மனம் உண்டானால் மார்க்கம் உண்டு’
என்பார்கள்.
சாதனைகளானாலும் சரி, வேதனைகளானாலும் சரி அவை அனைத்தும் மனத்தின்
வெளிப்பாடுகளே. ஒருவன் சாதித்தான் என்பதற்கும் அல்லது ஒருவன் சரிந்தான்
என்பதற்கும் ஒரே ஒற்றுமைதான். இருவரும் மனோசக்தியால் உந்தப்பட்டார்கள் என்பதே
உண்மை. அப்படியொரு உன்னதமான நிலையினை மனம் நமக்குக் கொடுக்கிறது. மனதைப் பற்றி
எழுதப்படாத ஒரு கதை வழக்கத்தில் உள்ளது. அதை வெறும் கதையாய் மட்டும்பாராமல், அதன் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்டால் மனம்
நமக்கு நிஜமாகும்.
மனிதர்கள் பிறக்காத ஒரு காலம்.
இதிகாசத்தின் படி இறை தெய்வங்கள் எல்லாம் பூமியில் நடமாடியதாக ஒரு தகவல். இன்னும்
கொஞ்ச காலத்தில் மனிதர்கள் என்ற உயிர்கள் பிறக்கப்போவதாக பிரம்மா அறிவிக்கிறார்.
இதைக் கேட்ட விஷ்ணுவும் சிவபெருமானும் மனம் கலங்கி பிரம்மாவுடன் கலந்தாய்வுச்
செய்கின்றனர். மும்மூர்த்தியும் மனம் கலங்கக் காரணம் மனிதர்கள் தன்னுடைய ஆறாம்
அறிவைப் பயன்படுத்தி இந்த பூமியையும் விண்ணையும் ஆளப் போகிறார்கள் என்பது தான்.
அப்படி ஆளப்போகும் பட்சத்தில் இறை தெய்வங்களெல்லாம் எங்கு செல்வது என்பதுதான்
இப்பொழுது கேள்வி. சரி...இந்தக் கேள்வியை முனிவர்கள்,ரிஷிகள்,தேவர்கள்,அடியாளர்களிடம் விட்டு விடலாம் என்று மும்மூர்த்திகள் முடிவு செய்தனர்.
முதலில் எல்லோரும்
விண்ணுக்குச் சென்று விடலாம் என்று பதிலளித்தனர். இதைக் கேட்ட மும்மூர்த்திகள், ‘மனிதர்கள் தன் அறிவைப் பயன்படுத்தி விண்ணுலகம்
வருவார்கள்’ என்று கூறினர். அடுத்து, அவர்கள் பூமியில் சென்று தஞ்சமடையலாம் என்றனர்.
அங்கும் பூமியைக் குடைந்து கொண்டு வந்து விடுவர் என்று கூறினர். இறுதியாக, கடலுக்கடையில் சென்று விடலாம் என்றனர். மிகச் சுலபமாக
நம்மைக் கண்டுபிடித்து விடுவர் என்றனர். நன்றாக ஆலோசித்து விட்டு, மும்மூர்த்திகளும் அறுதியிட்டுக் கூறினர். ‘மானுடர்கள் மிகச் சிறந்த நம்முடைய கடைசிப் படைப்பு.
ஆகவே, நாம் தஞ்சமடையும் சரியான இடம்
மனிதர்களிடம் அமையப் போகும் மனம் எனும் மாபெரும் சக்தி கொண்ட இடம். இந்த இடத்தைக்
காணப்போகிறவர்கள் ஒரு சிலரே. ஆகவே, மனமே நமக்கு மிகச்
சிறந்த இடம்.’ என்று முடிவுச் செய்யப்பட்டது.
‘தன்னை அறிந்தால் தனக்கு ஒரு கேடில்லை’ என்று திருமூலர் கூறியிருப்பதைக் கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள். இதையே
விவேகானந்தரும் ‘know
thy self’ கூறியது
எவ்வளவுப் பெரிய உண்மைகள். ‘மனிதனும்
தெய்வமாகலாம்’ என்ற கண்ணதாசனின் வரிகளைச்
சிந்தித்துப் பாருங்கள்.சுவாமி விவேகானந்தர் அவர்கள் இதனை மிக அழகாகச் சொல்லுவார்.
‘All power is
within you. You can do anything and everything. Don’t believe that you are
weak. Standup and express your diminity’. அந்த பவர் தான் மனம் எனும் மாபெரும் சக்தி. மனம்
செம்மையானால் வாழ்வு அர்த்தமாகும் என்பார்கள். இறைவன் உறைந்துக் கிடக்கின்ற மனதை நாம்
அறிய வேண்டமா?
New testament says, “The kingdom of God is within
you”-(Luke17:21) என்று
சொல்லப்பட்டிருக்கிறது. அந்த கிங்டம் ஏன் மனமாக இருக்கக்கூடாது? நாம் அறியாத வரை எல்லாம் சரியாகத்தான்
கொடுக்கப்பட்டிருக்கிறது. இறைவன் உன்னைப் படைத்தான் என்பதை விட, உன்னுள் உறைந்து கிடக்கிறான் என்பதே உண்மை. ‘பரிசோதிக்கப்படாத வாழ்வு வாழத் தகுதியற்றது’ என்று சாக்ரடிஸ் கூறியிருப்பதை மீண்டும்
நினைவுப்படுத்துகிறேன்.