இவ்வரிகளைச் சங்கப்
புலவர் கணியன் பூங்குன்றனார் தனது புறநானூற்றுப் பாடலில் வழங்கியிருக்கிறார்.
நன்மையும் தீமையும் அடுத்தவரால் வருவதில்லை என்று மிக அழுத்தமாகக் கூறுகிறார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இப்பாடல் வரிகளில் ஆழமான மனோதத்துவ
உண்மைகள் பொதிந்திருப்பதை வெளிக் கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். நன்மையும்
தீமையும் அடுத்தவரால் வருதில்லையென்றால் அதற்கு என்ன காரணம்? அதற்கு காரணம் நாம் தான் என்றால் நம்மில் பலரும்
அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அந்த ‘நாம்’ இங்கு எப்படி வேலைச் செய்கிறது என்று தெரிந்து கொண்டால்
நிச்சயம் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்.
உலகில் மனிதனுக்கு மட்டுமே ‘மனம்’ எனும் மாபெரும்
சக்தி இறைவனால் விதைக்கப்பட்டிருக்கிறது. மிருகங்களுக்கு அது கிடையாது. அதனால்தான்
ஔவையாரும் மானிடராய் பிறத்தல் அரிது
என்கிறார். மனம் எனும் அந்த பசுமை நிலத்தில் எதை விதைக்கிறோமோ அதுவே அங்கு அறுவடை
செய்ய முடியும். நம்முடைய எண்ணங்களே அங்கு விதைகளாக மாறுகின்றன. எண்ண அலைகள் கடல்
போன்றது. கோடிக்கணக்கான மக்களின் எண்ண அலைகள் ஆகாசத்தில் சஞ்சரித்துக்
கொண்டிருக்கின்றன. அதில் தம்முடைய எண்ணமும் அடங்கும். இங்கு தான், ‘நாம் எதை நினைக்கிறோமோ அதுவாக ஆகிறோம்’ என்ற உபநிடதத்தின் உயர் தத்துவம் உண்மையாகிறது.
பிறபஞ்சத்தின் விதியான ஆகர்ஷிக்கும்
சக்தி (LAW OF
ATTRACTION) நம்முடைய
எண்ணம் போல் இருக்கும் எல்லா எண்ணங்களையும் ஒன்றுக்கொன்று ஒருங்கிணைந்து
ஒன்றுபட்டு நமக்குத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதையே தான் ‘எண்ணம் போல் வாழ்வு’ என்பார்கள். ‘உன்னுடைய உள் மனதில் என்ன
பதிக்கப்பட்டு இருக்கிறதோ அது ஆகாயத்திரையில் இருக்கிறது என்று பொருள்படுவதாகக்
கூறப்படுகிறது. இது தான் வாழ்க்கையின் தத்துவம்’ என்று மேனாட்டு உளவியலாளர் ஹெர்மிஸ் கூறியிருக்கிறார்.
நம் மனதில் எண்ணங்களுக்கு
உருவம் இருக்கிறது. அவை எண்ணிய உடன் ஆகாயத்தில் சித்திரமாகப் பதிந்து விடுகிறது.
அதனால் தான் நம்முடைய இந்து சமயத்தில் இறை தெய்வங்கள் எல்லாம் சிலைகளாக
உருவாக்கப்பட்டன. அவை படங்களாகச் சித்தரிக்கப்பட்டன. மனித மூளையானது எண்
எழுத்துகளை விட படங்களைத்தான் அதிகமாக பதிவு செய்து வைத்திருக்கின்றன. சீனப்
பழமொழியில், ‘ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச்
சமம்’ என்பார்கள். நாம் நினைக்கும்
ஒவ்வொரு எண்ணமும் விநாடிக்கு 2 லட்சம் மைல் வேகத்தில் பயணம் செய்வதாக
அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். பிரபஞ்சத்தில் மனம் இருக்கிறது. மனதில்
பிரபஞ்சம் இருக்கிறது. மனமே கடவுள். கடவுளே மனம். ‘மனம் செம்மையானால் மந்திரம் தேவையில்லை’ என்பது எவ்வளவு பெரிய உண்மைகள்.
இதுகாறும் விவரிக்கப்பட்ட
எண்ணங்களுக்கும் நமக்கு ஏற்படும் நன்மை தீமைக்கும் நிச்சயம் தொடர்புண்டு. ஒரு
கதையில் கற்பகத்திரு மரம் என்று ஒன்று இருந்தது. அந்த மரத்திற்கு கீழே யார்
வேண்டுமானாலும் என்ன நினைத்தாலும் அப்படியே அது கொடுத்துவிடும். உண்மை
இப்படியிருக்க, அந்த வழியாக வந்த ஒர் இளைஞன்
கலைப்பாருவதற்காக சற்று நேரம் அந்த மரத்தடியில் படுத்து ஓய்வெடுத்தான். படுத்தவன்
திடீரென்று, ‘ஆஹா, ஒரு மெத்தை இருந்தால் எப்படி இருக்கும்’ என்று நினைத்தான். உடனே ஒரு மெத்தைத் தோன்றியது. மகிழ்ச்சியில் அவன், ‘வெண்சாமரம் வீச இருவர் இருந்தால்’ என்று நினைத்த உடனே அங்கு இரு பெண்கள் நின்று கொண்டு
அவனுக்கு வெண்சாமரம் வீசினார்கள். ‘பசிப்பது போல் இருக்கிறதே
கொஞ்சம் உணவு கிடைத்தால்’ என்று நினைத்த
மாத்திரத்தில் அவன் முன்னே பல்வகை அறுசுவை உணவுகள் தோன்றின. உண்ட கலைப்பில்
கண்ணயர்ந்த அவனுக்குத் திடீரென்று, ‘ஆஹா, காட்டில் இருக்கிறோமே புலி தாக்கி விட்டால்’.
அவ்வளவு தான். அவன் கதை
முடிந்தது. அந்த கற்பகத்திரு மரம்போல் தான் நம் மனமும். கேட்டதைக் கொடுக்கக்
காத்திருக்கிறது. ஆனால், நாம் தான்
காத்திருக்கவில்லை. விணை விதைத்தவன் தானே விணையறுக்க வேண்டும். மற்றவரைக் குறை
கூறினால் எப்படி?
‘தீதும் நன்றும்
பிறன் தர வாரா’ என்பது உண்மைதானே? ‘பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம் கருமமே
கட்டளைக்கல்’ என்று திருவள்ளுவர்
மொழிந்திருப்பதைச் சற்று சிந்தித்து பாருங்கள். நமக்கு ஏற்படும் நன்மைக்கும்
தீமைக்கும் நம்முடைய செயல்களே காரணம் என்று ஆணித்தரமாக உரைப்பது தீதும் நன்றும்
பிறன்தர வாரா என்பது உறுதியாகிறது.
நம்முடைய உள்மனதிற்கும் இந்த
பிரபஞ்சத்திற்கும் நேரடித் தொடர்பு உண்டு.
ஆகவே, நாம் நினைக்கும் எண்ணங்கள் இந்த
பிரபஞ்சத்தில் பதிவாகிறது. நம் உடம்பில் எழுபத்து ஐயாயிரம் கோடி சிவப்பு அணுக்கள்
இருப்பதாக உடம்பியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த உயிர் அணுக்கள் நாம் எண்ணும்
எண்ணங்களை உடல் முழுதும் பரவச் செய்கிறது. பிறகு, பிராணா சக்தியின் மூலம் பிரபஞ்ச மனதுடன் தொடர்பு கொள்கிறது. பிராணன் என்பது பிரபஞ்ச சக்தி. உயிர்த்தத்துவம். இது
வாயு மண்டலத்தில் திரவ வடிவில் இருக்கும். சூரிய ஒளி, தண்ணீர் மற்றும் உணவில் இது இருக்கும். உயிர் அணுக்களுக்கும் உடல்
உறுப்புகளுக்கும் வலிமை அளிப்பது இந்த பிராண சக்தி. அஃது வானவெளியில் இருந்து
கற்று வழியே மனித உடம்பினுள் வந்து சேர்கிறது.
இன்னும் சற்று ஆழமாகப்
பார்ப்பின், நம் உடம்பல் உள்ள ஒவ்வொரு உயிர்
அணுக்களுக்கும் தனக்கு என்று ஒரு உணர்வு உள்ளம் இருக்கிறது. அவைகளை நமது மன
உணர்வுகளால் பாதிப்படையச் செய்கிறோம். இக்கருத்தினை வள்ளுவத்தில், ‘கொல்லான் புலாலை மறுத்தானைக் கைக்கூப்பி எல்லா
உயிரும் தொழும்’ என்று வள்ளுவர் கூறுகின்றார்.
எல்லா உயிரும் என்பது பிராணிகள் அல்லது மிருகங்கள் மட்டும் அல்ல, மாறாக நம் உடம்பினில் இருக்கும் எழுபத்து ஐயாயிரம்
கோடி சிவப்பு அணுக்களும் தான். ஆக, எண்ணம் போல்
வாழ்வு என்பது புலனாகிறது.
எண்ண அலைகள் கடல் போன்றது.
கோடிக்கணக்கான மக்களின் எண்ண அலைகள் ஆகாசத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறது.
பிராண சக்தியின் மூலமாக பிரபஞ்சம் நம்மிடம் பேசுவதாக தாந்தரீகர்கள் சொல்கிறார்கள்.
மேலும், பிரபஞ்சமானது மக்கள் மூலமாகவும், சம்பவங்கள் மூலமாகவும், சகுணங்கள் மூலமாகவும், சின்னங்கள்
மூலமாகவும் மற்றும் கனவுகள் மூலமாகவும் நம்மிடம் பேசுகின்றன. அதை அறிந்து கொண்டால்
தனக்கொரு கேடில்லை. ‘எதை விதைக்கிறீர்களோ அப்படியே அதை
அறுவடை செய்கிறீர்கள்’ என்று இயற்கையின் நியதி(Cosmic low) உரைக்கின்றது. இப்பொழுது ‘புரிகிறதா தீதும் நன்றும் பிறன்தர வாரா’ என்று.